Wednesday, September 8, 2010

மூலப் பொருள்






               “உன் அழகின்
                  கழிவுப் பொருளாய்,
                    நகத்தை வெட்டி எறிகிறாய்,
                     நம் காதலின் மூலப்பொருளாய்,
                      அதை சேமித்து வைக்கிறேன்”...






Friday, September 3, 2010

பத்து ரூபாய்


                         பத்து ரூபாய்
                             
கால் வயிறு அரைவயிறு கஞ்சிக்குடிச்சு
காசு பணம் சேத்தாச்சு..!

மச்சு வீட்டு மாடசாமினு
ஊருக்குள்ள பேருவாங்கியாச்சு..!

காலேஜ் போர ஒம்புள்ள
காசோட அருமை தெரியல..!

கதை சொல்றேன்
நானு சொல்லிகுடு..!

முவ்விருவது வருச முன்னாடி
பாட்டேன் பூட்டேன் காலத்துல...

மக வீடு போற மலையூருக் கருப்பன்
முப்பத்தியாரு கல்லு நடந்தே போறாரு..!

காரணம் நான் கேக்க போகவர
எழுவது காசு ஆயிடுமாம்.

பக்கத்தூரு பாப்பாத்தி
வீட்டுக்குள்ள மூணு வங்கி

முந்தாணை வங்கியில
முடிஞ்சது ரண்டு காசு,


புளி மொட வங்கியில
பொதச்சது மூணு காசு,


அவுக புருசன் அந்தரங்க சுத்தியல
இருக்கி முடிஞ்சது ஏழு காசு,

மொத்த வங்கி பாக்கியிமே
ஒத்த ரூபா தாண்டலயாம்..!


தாலியத்தான் அறிப்பீக
வெளங்காம போவீக..!


கத்தி கதறி ஊரை
ஒலையில போடுற..!


கருவாச்சி தொலச்சது
மூணுகாசுதாணமாம்...!


சொன்னகதையை சொல்லிட்கொடு
ஒம்புள்ளைக்கு,


காக்கா கழிஞ்சிருச்சாம்,
தொடைக்க துணியிலையாம்..!!


ஒம்புள்ள துடைச்செரிஞ்ச காகிதம்
பத்துரூவா தாளாம்...!!!



[படித்துப் புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்]